`எனக்கும் முன்னாடி விண்வெளி நாயகன் கிரேசி மோகன் தான்' - கமல்ஹாசன் நகைச்சுவை பேச்சு

தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் , நாடக எழுத்தாளர் மற்றும் நடிகராக இருந்தவர் கிரேசி மோகன்.கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் காலமானார்.
`எனக்கும் முன்னாடி விண்வெளி நாயகன் கிரேசி மோகன் தான்' - கமல்ஹாசன் நகைச்சுவை பேச்சு
Published on

தமிழ் சினிமாவில் தலைச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் , நாடக எழுத்தாளர் மற்றும் நடிகராக இருந்தவர் கிரேசி மோகன். இவர் நகைச்சுவை வசனங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை அவர் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் காலமானார்.

கிரேஸி மோகன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவான, மைக்கேல் மதன காமராஜ், அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம்,வசூல் ராஜா MBBS, பம்மல் கே சம்பந்தம், ஆகிய திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் நேற்று கிரேசி மோகன் எழுதிய நாடகங்கள், வசனங்கள், சிறு கதைகள் என மொத்த 25 புத்தகங்கள் கொண்ட தொகுப்பை வெளியிட்டனர். அதில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

அதில் கமல்ஹாசன் பேசியதாவது " நானும் அவரும் வெவ்வேறு வீட்டில் பிறந்த இரு சகோதரர்கள். நாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தினம் தோறும் பேசிக்கொள்வோம். நானும் அவரும் பேஇய கதைகள் பல அவை அனைத்தும் வெற்றி திரைபடங்கள் தான். எனக்கு முன்னாடி வின்வெளி நாயகனாக ஆனவர் மோகன் அண்ணா தான். என்னைய விட்டு அவர் தான முதல்ல போயிட்டாரு. எல்லாரும் ஒரு நாள் போய் தான ஆகனும். எதாவது டிராமா பார்க்கனும்னா அங்க வந்து பாருங்க" என மிகவும் நகைச்சுவையாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com