விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு - பிறந்தநாள் பரிசு

ராஷ்மிகா மற்றும் ரசிகர்களின் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விஜய்
விஜய் தேவரகொண்டாவின்  ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு - பிறந்தநாள் பரிசு
Published on

கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா தம்பதியினரின் திருமணம் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இன்றைய இளம் தலைமுறையினர்களின் பிடித்தமான ஜோடிகயாகவும், அதிகமாக வலைதளங்களில் பின்தொடரப்படும் ஜோடிகளாகவும், விரோஷ் ஜோடிகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய அவர், ஸ்பெஷல் கேக் வெட்டி தன்னுடைய ரசிகர்களுக்கு ஊட்டி விட்டார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும், ரெளடி ஜனார்த்தனா திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில், “உலகையே எதிர்த்து போராடும் ஒருவன், தன்னுடைய அன்பிடம் மட்டும் சரணடைகின்றான்” என்று குறிப்பிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com