விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் பெயர் நாளை வெளியாகிறது

விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது. விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்கவுள்ளார்.
விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் பெயர் நாளை வெளியாகிறது
Published on

நான் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் பெயர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com