நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்- விக்னேஷ் சிவன்

நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை.
நயன்தாராவுக்கு கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும்- விக்னேஷ் சிவன்
Published on

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விக்னேஷ்சிவன் இயக்கத்தில் உருவான ‘எல்.ஐ.கே.’ படம் கடந்த 10-ந்தேதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனது மனைவி நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்கள் காதல் இன்னும் கவிதை போல அழகாக இருக்கிறது. நான் எந்த பாடல் எழுதினாலும் அதை நயன்தாராவுக்கு அனுப்புவேன். நல்ல காரியத்தை செய்யும் போது கடவுளிடம் பிரார்த்தனை செய்து அதை திரும்ப பெறுகிறோம் அல்லவா? அப்படிதான். நான் ஒரு பாடல் எழுதினால் அதை நயன்தாராவுக்கு அனுப்புவேன். நயன்தாரா அதை படித்து விட்டு தேவதை எமோஜியையும், இதயத்தையும் அனுப்புவார். அதற்கு பிறகுதான் நான் அந்த பாடலை இசை அமைப்பாளர்களுக்கு அனுப்புவேன்.

நாங்கள் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டிருக்கும் நிலையிலும் நான் எழுதிய பாடலை அனுப்பினால், சிறிது நேரம் எடுத்துக் கொண்டு எனக்கு அனுப்புவார். எல்லா மனைவிகளை போல நயனுக்கும் கோபம் வந்தால் பயங்கரமாக இருக்கும். ஆனால் நயன்தாராவை போல் இனிமையான மென்மையானவர் வேறு யாரும் இல்லை. எங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே காரில் பயணம் செய்வது பிடிக்கும். வாழ்க்கை அழகாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com