ஐதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்த விடாமுயற்சி படக்குழு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி.படப்பிடிப்பு அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது.
ஐதராபாத்தில் ஷூட்டிங்கை முடித்த விடாமுயற்சி படக்குழு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.

துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அதன்பிறகு அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.

இந்த நிலையில் விடாமுடற்சி படத்தின் ஒரே ஒரு பாடல் ஷூட் மட்டும் நிலுவையில் இருந்தது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அதன்பிறகு படத்தின் புரொடக்ஷன் வேலைகள் தொடரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சியை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார் அஜித் குமார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சில காட்சிகளில் நடித்து முடித்துவிட்டார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

X

Maalai Malar
www.maalaimalar.com