Vetrimaaran | சீக்கிரமே சர்ப்ரைஸ் இருக்கு... `அரசன்' அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

Vetrimaaran | சீக்கிரமே சர்ப்ரைஸ் இருக்கு... `அரசன்' அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
Published on
Summary

அரசன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் `அரசன்.' அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வடசென்னை படத்தின் கதைக்களத்தில் உருவாகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

படத்தின் முதல் அறிவிப்பு தொடங்கி, டைட்டில் மற்றும் இதர அப்டேட் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தினை இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் அரசன் படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வெற்றி மாறன், "இந்த முறை கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகே படப்பிடிப்புக்கு சென்றேன். எனது மற்றப் படங்களை விட இந்தப் படம் வேகமாக நிறைவடையும். சில நாட்களில் இந்தப் படத்தின் காட்சிகளில் சிலவற்றை எங்களால் வெளியிட முடியும். அதுவரை நாங்கள் இந்த விஷயததில் அமைதி காக்க விரும்புகிறோம்," என்றார்.

அரசன் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com