

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "அரசன்". இந்த திரைப்படம் வடசென்னை திரைப்படம் உருவான காலக்கட்டத்திலேயே எடுக்கப்படுகிறது. முதலில் இது வடசென்னை படத்தின் 2-ஆம் பாகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.
எனினும், அதில் உண்மை இல்லை என்று இயக்குநர் வெற்றி மாறன் தெளிவுப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அரசன் திரைப்படத்தில் அன்பு (வடசென்னை படத்தில் தனுஷ் கதாபாத்திரம்) இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இயக்குநர் வெற்றி மாறன் பதிலளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "உண்மையில் எனக்கு இது தெரியலை. நான் கதை எழுதிய பிறகு படப்பிடிப்பு, மீண்டும் எழுத்து அதன்பிறகு படப்பிடிப்பு என்றே பணியாற்றுகிறேன். என்னால் திட்டமிட முடியாது, எழுதும் போது எனக்கு அதற்கான ஐடியா கிடைத்து, எல்லாம் சரியாக வந்தால் நடக்கலாம், எழுத்தில் சரியாக வரவில்லை என்றால் வரவில்லை அவ்வளவு தான்," என்றார்.