Vadachennai 2 | விரைவில் வடசென்னை 2 அப்டேட் - இயக்குநர் வெற்றி மாறன்

"கர" திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
Vadachennai 2 | விரைவில் வடசென்னை 2 அப்டேட் - இயக்குநர் வெற்றி மாறன்
Published on

இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் "வடசென்னை." இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் இன்றளவும் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை 2 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் "கர" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றிரவு (ஏப்ரல் 19) நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன் கர திரைப்படம் பற்றியும், வடசென்னை 2 பற்றியும் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இயக்குநர் வெற்றி மாறன், "எனக்கு இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் முதல் திரைப்படம் மிகவும் பிடிக்கும். தனுஷ் என்னிடம் அதுபற்றி நிறைய பேசியுள்ளார். "கர" திரைப்படம் பற்றி என்னிடம் பேசிய அனைவருமே படம் குறித்து நல்ல விஷயங்களையே கூறினர்.

வழக்கமாக திரைப்படங்களை குறை சொல்பவர்கள் கூட "கர" திரைப்படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். வடசென்னை 2 திரைப்படத்தை பொருத்தவரை, விரைவில் நாங்கள் அப்டேட் கொடுப்போம்," என்றார்.

"போர் தொழில்" திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா தற்போது நடிகர் தனுஷ் நடித்துள்ள "கர" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com