`பொல்லாதவன் படத்துக்கு முதல்ல என்ன வேண்டாம்-ன்னு சொன்னாரு வெற்றி மாறன்' - சந்தானம்

DD Next Level திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
`பொல்லாதவன் படத்துக்கு முதல்ல என்ன வேண்டாம்-ன்னு சொன்னாரு வெற்றி மாறன்' - சந்தானம்
Published on

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகமான DD Next Level உருவாகியுள்ளது.

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. DD Next Level திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.

படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்தை ஒரு படத்திற்குள் நுழைய வைத்து அங்கு நடக்கும் சம்பவத்தையும் த்ரில்லர், ஆக்ஷன், காமெடி கலந்து வெளியாகி உள்ள ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சந்தானம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " பொல்லாதவன் திரைப்படத்தில் முதலில் என்னை வேண்டாம் என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.பின் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியில்தான் என்னை படத்தில் சேர்த்தார். எனக்கு அந்த திரைப்படத்தில் கதாப்பாத்திரமே கிடையாது. நன் வெறும் கருணாஸ் நண்பராக அவர் உடன் ஒன்லைன் பஞ்ச் வசனங்களை பேசினேன் அது அதற்கு பிறகு ஹிட்டானது. அதேப்போல் இயக்குநர் ராஜமவுலி நான் ஈ படத்தில் வசனமே இல்லாமல் ஒரு கதாப்பாத்திரத்தை கொடுத்தார். ஆனால் நான் டப்பிங்கில் சில வசனங்களை பேசினேன். அதை பார்த்து வியந்து என்னை பாராட்டினார்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com