`வீர தீர சூரன் உங்களுக்காக பண்ண படம்'- மனமுருகி வீடியோ வெளியிட்ட விக்ரம்

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
`வீர தீர சூரன் உங்களுக்காக பண்ண படம்'- மனமுருகி வீடியோ வெளியிட்ட விக்ரம்
Published on

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி வெளியானது.

திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் உலகளவில் 52 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். திரைப்படம் இந்த வார இறுதியில் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தை இந்தளவு வெற்றி திரைப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார். அதில் "இப்படம் வெளியாக இருந்த சிக்கல்கள் உங்களுக்கே தெரியும். எனது ரசிகர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன் அப்படி ஒரு திரைப்படமாக இது அமைந்தது. படத்தை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்." என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com