காதலர் தினத்தில் திரிஷாவின் புதுவரவு

கடந்த ஆண்டு தான் பாசத்தோடு வளர்த்த சோரோ என்ற நாய் இறந்து போனதை துக்கத்தோடு தெரிவித்து இருந்தார். தெலுங்கில் சிரஞ்சீவியுடனும், மலையாளத்தில் மம்முட்டியுடனும் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
காதலர் தினத்தில் திரிஷாவின் புதுவரவு
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா, பிராணிகள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விலங்குகள் நல அமைப்பிலும் பொறுப்பில் இருக்கிறார். தெருவோர நாய்களை பராமரித்து தத்தும் கொடுக்கிறார். கடந்த ஆண்டு தான் பாசத்தோடு வளர்த்த சோரோ என்ற நாய் இறந்து போனதை துக்கத்தோடு தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் காதலர் தினத்தையொட்டி, தங்கள் வீட்டுக்கு புதுவரவு வந்திருப்பதை திரிஷா அறிவித்துள்ளார். அதன்படி, புதிய நாய்க்குட்டியை திரிஷா வாங்கியுள்ளார். இந்த நாய்க்கு இஸ்சி என்று பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரிஷாவின் புதிய வரவான நாய்க்குட்டிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரிஷா தற்போது கமல்ஹாசனுடன் 'தக்லைப்', அஜித்குமாருடன் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 45-வது படத்தில் நடித்து வருகிறது. தெலுங்கில் சிரஞ்சீவியுடனும், மலையாளத்தில் மம்முட்டியுடனும் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com