Trisha | வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி... த்ரிஷாவின் இஸ்டா ஸ்டோரி வைரல்

பிறந்தநாளை ஒட்டி நடிகை த்ரிஷா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Trisha | வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி... த்ரிஷாவின் இஸ்டா ஸ்டோரி வைரல்
Published on

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நேற்று (மே 04) தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கொண்டாட்டத்திற்கு முன்பு, அவர் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பிறந்தநாள் கொண்டாடிய நடிகை த்ரிஷாவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கல் வாழ்த்து தெரிவித்தனர். பொங்கி வழிந்த அன்பால் நெகிழ்ந்த திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்த இன்ஸ்டா பதிவில் அவர், "பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த அளவற்ற அன்பை கண்டு நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போகிறேன், நன்றியுணர்வுடன் இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாளில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த கையோடு, நடிகை திரிஷா சென்னையில் உள்ள நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் இல்லத்திற்கு சென்று திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com