மணிகண்டன் நடித்த `குடும்பஸ்தன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார்.திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மணிகண்டன் நடித்த `குடும்பஸ்தன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வணிக ரீதியிலும் அது வெற்றிப்படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் திரைப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுவே இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் திரைப்படமாகும்.

தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இது நகைச்சுயான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. குருசோமசுந்தரம் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் முதல் பாடலான ஸீரோ பேலன்ஸ் மற்றும் கண்ண கட்டிகிட்டு ஹீரோ பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பஸ்தன் எப்படி உருவாகிறான் என்பதை நகைச்சுவையாக காட்சிப்படுத்தியுள்ளனர். டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com