

தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வெற்றி நடிப்பில் உருவாகி உள்ளப் படம் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கு. இப்படத்தில் பிரிகிடா, ரங்கராஜ் பாண்டே, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு, மற்றும் லிஸ்ஸி ஆன்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.
1944-ல் சென்னையில் 'இந்து நேசன்' பத்திரிகையாளர் சி.என். லட்சுமிகாந்தன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அப்போது பெரும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டது.
இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.