இது சாதாரண சினிமா இல்ல.. இது ஒரு சக்தி - காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு

கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது.படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சாதாரண சினிமா இல்ல.. இது ஒரு சக்தி - காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு
Published on

கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வேலைப்பார்த்த சிலரின் மரணங்கள் அடுத்தடுத்து நடந்தது. இது காந்தாரா திரைப்படத்தால் தான் இவ்வாறு நடக்கிறது என பேச்சுகள் திரைவட்டாரத்தில் பேசப்பட்டது.

இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com