இது தான் என் எதிர்கால லட்சியம்- மமிதா பைஜூ

நிகழ்ச்சி ஒன்றில் மமிதா பைஜூ பேசிய கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன.
இது தான் என் எதிர்கால லட்சியம்- மமிதா பைஜூ
Published on

தமிழில் 'டியூட்','கர' படங்களில் நடித்து கலக்கிய மமிதா பைஜூ, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் மமிதா பைஜூ பேசிய கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன.

"என்னுடைய ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் படங்களை வழங்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம். அதோடு ஒரு அன்பான குடும்பத்தை உருவாக்க வேண்டும்.

என்றாவது என்னுடைய கடந்த காலத்தை நினைத்து பார்க்கும்போது, உண்மையான மகிழ்ச்சி, அமைதி, திருப்தி எனக்கு இருக்க வேண்டும். அதை நோக்கி தான் என்னுடைய பயணம்" என்று மமிதா பைஜூ குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com