

முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார். அப்போது, விவேக் எழுதிய "ஆளப்போறான் தமிழன்.." பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர் விஜய்க்கு வழங்கினார்.
இதன் புகைப்படத்தை வெளியிட்டு பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.