மூன்றாவது திருமண வாழ்க்கையும் கசப்பில் முடிந்தது - மீரா வாசுதேவன் கண்ணீர் பேட்டி

17 வருட வாழ்க்கையில் தான் சந்தித்த துயர சம்பவங்களை பகிர்ந்த மலையாள நடிகை
மூன்றாவது திருமண வாழ்க்கையும் கசப்பில் முடிந்தது - மீரா வாசுதேவன் கண்ணீர் பேட்டி
Published on

திருமண வாழ்க்கையில் தனது 17 வருட காலத்தை வீணடித்து விட்டதாகவும், சரியான வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டதாகவும் மலையாள நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான உன்னை சரணைடைந்தேன் படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு நடிகை மீரா வாசுதேவன் அறிமுகமானார்.

இதையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஐந்து வருடத்தில் விவாகரத்து பெற்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற திருமண வாழ்க்கையும் முறிவடைந்த நிலையில், மூன்றாவது திருமணமும் கசப்பில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் எனது 17 வருடத்தை திருமண வாழ்க்கையில் வீணடித்து விட்டேன். அதற்கு பதிலாக சினிமா, உடல்நலம் அல்லது குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவு செய்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com