மழையில் நனைகிறேன் படத்தின் `நாட்கள் அழகாய் மாறி போனதே' பாடல் வெளியானது

அன்சன் பால் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மழையில் நனைகிறேன் படத்தின் `நாட்கள் அழகாய்  மாறி போனதே' பாடல் வெளியானது
Published on

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் உருவாகியுள்ள 5-வது தமிழ் திரைப்படமாகும்.

இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.

அன்சன் பால் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபோ மோனிகா ஜான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது.

இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் பாடலான நாட்கள் அழகாய் மாறி போகுதே வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை லலித் ஆனந்த் வரிகளில் ஷ்வேதா மோகன் பாடியுள்ளார். பாடலின் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com