ஹரி ஹர வீரமல்லு படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது

மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
ஹரி ஹர வீரமல்லு படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாகிறது
Published on

மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளனர். இந்தப் படம், முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டுள்ளார்.

படத்தின் முதல் பாடலின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான எம்மனச பறிச்சுட்டா பாடல் நாளை மதியம் 3 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com