விடாமுயற்சி படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி."இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளியீடு
Published on

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆக்ஷன் காட்சிகள், படத்தின் ஒளிப்பதிவு, டிரெய்லரின் தரத்தை உயர்த்தியுள்ளது. படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடல் நாளை காலை 10:45 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com