ரசிகர்களைக் கவரும் ‘நாகபந்தம்’ டிரெய்லர்!

திரைப்படம் வரும் ஜூலை 3-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
The gripping trailer of 'Nagabandham'
Published on

பிரபல இயக்குனர் அபிஷேக் நாமாவின் இயக்கத்தில், நடிகர் விராட்கர்ணா கதாநாயகனாக நடித்து முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நாகபந்தம்’. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த டிரெய்லரில் உலகப் புகழ்பெற்ற திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவிலில் இருக்கும் ரகசியங்கள் மற்றும் அங்கு அனைவராலும் போற்றப்படும் ஆன்மீக சின்னமான 'பிரம்ப கமலம்' என்பது வெறும் சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் மிகப்பெரிய ஆன்மீகப் பின்னணி உள்ளது என்பதை கோவில் பூசாரி வெளிப்படுத்தும் காட்சிகள் டிரெய்லரில் சுவாரசியத்தை கூட்டியுள்ளன.

பழங்கால புராணங்கள், பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட புதையல்கள் மற்றும் அவிழ்க்கப்படாத தெய்வீக மர்மங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, ஹாலிவுட் தரத்திலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு மெகா பட்ஜெட் புராண சாகச திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய திரை உலகில் பக்தி மற்றும் சாகசம் கலந்த கதைகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த ‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம், தியேட்டர்களில் ரசிகர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com