என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித்தின் 32 வருட   திரைப்பயணத்தை வாழ்த்திய குட் பேட் அக்லி திரைப்படக்குழு
    X

    அஜித்தின் 32 வருட திரைப்பயணத்தை வாழ்த்திய குட் பேட் அக்லி திரைப்படக்குழு

    • இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.
    • 32 வருட திரை பயணத்தை தொடர்ந்து வருவதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாப்பாத்திரத்தில் லுக்கில் படத்தின் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

    அஜித் குமார் அவரது 32 வருட திரை பயணத்தை தொடர்ந்து வருவதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில் 32 வருட தைரியம் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே பெருமையுடன் இருக்க வாழ்த்துகிறோம் என்று பதிவிட்டுள்ளனர். இப்போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×