என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி - சமுத்திரகனி புகழாரம்
    X

    `இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி' - சமுத்திரகனி புகழாரம்

    • சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். பாடலாசிரியர் மோகன் ராஜன் பாடல்களை எழுத, ஆடை வடிவமைப்பு பணிகளை நவா ராஜ்குமார் கையாள்கிறார்.

    ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

    படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடைப்பெற்றது. அதில் படக்குழுவுடன் பல முன்னணி இயக்குநர்கர்களான சமுத்திரகனி, டி.ஜே ஞானவேல், புஷ்கர் காயத்ரி, விஜய் ஆண்டனி , தமிழரசன் பச்சைமுத்து கலந்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வந்த அனைத்து இயக்குநர்களும் படத்தை பாராட்டியும் புகழ்ந்தும் பேசினர் அதில் இயக்குநர் மற்றும் நடிகரான சமுத்திரகனி " இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த திரைப்படமாக இப்படத்தை கூறுவேன். உண்மையிலேயே மிகவும் கனமாகவும் பெருமையாகவும் இருந்தது. இலங்கை தமிழர்களுக்கு ஒரு அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும். சசிகுமாருக்கு எப்படி சுப்பிரமணியபுரமோ, எனக்கு எப்படி நாடோடிகளோ உங்களுக்கு இப்படம். இதனை உங்களால் வெல்லவே முடியாது. அறத்தை பற்றி சொல்லும் படம், அன்பு நிறைந்த படம் ,இது மிகவும் நேர்மையான திரைப்படம் " என நெகிழ்ந்து பேசினார்.

    Next Story
    ×