தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் அப்டேட்!

அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'.
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் அப்டேட்!
Published on

அறிமுக இயக்குனர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க'. இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார். பரத் ஆசிவகன் இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் முதல் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர் இதனை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com