தீபாவளிக்கு வெளியாகுமா கேம் சேஞ்சர் படத்தின் டீசர்?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ளன
தீபாவளிக்கு வெளியாகுமா கேம் சேஞ்சர் படத்தின் டீசர்?
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு தகவல் அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் 75 நாட்கள் உள்ளன என போஸ்டரில் குறிப்பிட்டு. டீசரின் அதிரடி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கிறது விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் படத்தின் டீசர் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com