ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணையாக வாழ்ந்தவர்.. சூர்யா இரங்கல்

ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணையாக வாழ்ந்தவர்.. சூர்யா இரங்கல்
Published on

தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக இருந்து வந்த நிலையில், நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்து பலர் சமூக வலைதளங்களிலும், நேரிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சூர்யா விஜயகாந்த்-க்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், "அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நம்ம கூட இல்லை என்ற செய்தி கேட்டு, மனசுக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு. ஒரு கண்ணில் துணிச்சல், ஒரு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞர் அவர். கடைக்கோடி மக்கள் வரைக்கும் எல்லாருக்கும் எல்லா உதவிகளும் செய்து, புரட்சி கலைஞனாக, கேப்டனாக நம் மனங்களில் இடம் பிடித்தவர். அண்ணன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com