விரைவில் "டில்லி வருவார்" - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சட்த்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
விரைவில் "டில்லி வருவார்" - கைதி 2 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
Published on

லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கி 2019-ம் ஆண்டு வெளியான படம் 'கைதி'. இப்படத்தை எஸ். ஆர். பிரகாஷ்பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தனர்.

சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின்பு தான், லோகேஷ் கனகராஜ் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், 'கைதி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது- கார்த்திக் மற்றும் எஸ்.ஆர். பிரவுக்கு நன்றி. இவர்களால் தான் 'லோகேஷ் யுனிவர்ஸ்' சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்," என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் கைதி இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் விரைவில் துவங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com