கராத்தே பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் தமிழக டிஜிபியின் மகள் தவ்தி ஜிவால்

ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார்ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கராத்தே பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் தமிழக டிஜிபியின் மகள் தவ்தி ஜிவால்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com