நயன்தாரா வந்தே ஆகனும்னு கட்டாயப்படுத்த முடியாது- விஷால் கருத்து

நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நயன்தாரா வந்தே ஆகனும்னு கட்டாயப்படுத்த முடியாது- விஷால் கருத்து
Published on

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷாலிடம் நயன்தாரா பட புரொமோஷன்களில் கலந்து கொள்ளாதது ஏன்? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "நயன்தாரா எந்த பட புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார், அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகனும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு இஷ்டமில்லை என சொல்லுபோது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், வந்தால் நல்லாயிருக்கும் படத்தின் புரோமோஷன்களில் நடிகர்கள் பங்கேற்பது தப்பே இல்லை" என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com