விஷால் 34வது படத்தின் இயக்குனர் யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் 34வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷால்
விஷால்
Published on

லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.

விஷால் 34
விஷால் 34

விஷால் 34

இந்நிலையில் விஷாலின் 34வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஷாலின் 34 படத்தை சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால் 34
விஷால் 34

விஷால் 34

இதற்கு முன்பு விஷாலின் தாமிரபரணி, பூஜை படங்களை ஹரி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com