ஜெயிலர் படம் பற்றி ஒரு விஷயம் உறுதியாக சொல்ல முடியும்.. வசந்த் ரவி என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வசந்த் ரவி நடித்துள்ளார்.இப்படம் குறித்து வசந்த் ரவி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஜெயிலர் படம் பற்றி ஒரு விஷயம் உறுதியாக சொல்ல முடியும்.. வசந்த் ரவி என்ன சொன்னார் தெரியுமா?
Published on

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்து நடிகர் வசந்த் ரவி நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், இந்த படத்தை நான் ஒப்புக் கொள்ள ரஜினி சார் மற்றும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்களுக்காக மட்டும் தான். என்னை 70 வயதிலும் பிசியாக வைத்துக் கொள்ளும்படி ரஜினி சார் அறிவுரை கூறினார். இந்த படத்தை பற்றி ஒரு விஷயம் என்னால் உறுதியாக சொல்ல முடியும், ஜெயிலர் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. நெல்சனிடம் ரியலிஸ்டிக் மீட்டரை கமர்ஷியல் டெம்ப்ளேட்டில் சொல்லும் திறமையுள்ளது. டார்க் காமெடியை டெட்பான் முக பாவனையோடு சொல்லும் அவருடைய ஸ்டைல் தமிழ் சினிமாவிற்கு புதியதாக உள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com