முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த பாலா

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாலா
பாலா
Published on

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரோஷினி பிரகாஷ் - அருண் விஜய்

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com