இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா.. இணையத்தை ஆக்கிரமிக்கும் 'தலைக்கூத்தல்' டீசர்..

இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக் கூத்தல்’.இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தலைக்கூத்தல்
தலைக்கூத்தல்
Published on

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தலைக்கூத்தல்

இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தலைக்கூத்தல்

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா, நீங்க இத செய்வீங்களா ? என்ற வசனம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'தலைக் கூத்தல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com