அன்பு செய்ய ஆளிருந்தா கோவிலுக்கே வேலயில்ல.. கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனி பட பாடல்..

இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைக் கூத்தல்’. இப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அன்பு செய்ய ஆளிருந்தா கோவிலுக்கே வேலயில்ல.. கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனி பட பாடல்..
Published on

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தலைக்கூத்தல்

இதைத்தொடர்ந்து, தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தலைக்கூத்தல்

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பாடலான 'உச்சத்துல வெண்ணிலவு' பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ள இந்த பாடலை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com