படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொப்பன சுந்தரி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

சொப்பன சுந்தரி
சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி

டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கிவுள்ள நிலையில் விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com