யாரோட என் காதல் கதை பேச.. உருகும் சூரி

சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருடன்’.'கருடன்' படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.
யாரோட என் காதல் கதை பேச.. உருகும் சூரி
Published on

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருடன்'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு ஜோடியாக ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'கருடன்' படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'கருடன்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'பஞ்சவர்ண கிளியே' பாடல் வெளியாகியுள்ளது. காதலியை பார்த்து சூரி உருகுவது போன்று உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com