நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சோனம் கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகை சோனம் கபூர், திருமணத்திற்கு பிறகு லண்டனில் வசித்து வருகிறார்.சோனம் கபூரின் வளைகாப்பு லண்டனில் விமர்சையாக நடைபெற்றுள்ளது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சோனம் கபூர்
Published on

பாலிவுட்டின் முன்னணி நடிகையும் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்து கொண்டார். சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

சில நாட்களுக்கு முன் கர்ப்பம் தறித்த சோனம் கபூர் 'பேபிமூனுக்காக' இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சோனம் கபூர், கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் லண்டனில் தனது வளைகாப்பு விழாவை கொண்டாடினார்.

சோனம் கபூர்
சோனம் கபூர்

சோனம் கபூர்


இதைத்தொடர்ந்து வளைகாப்புக்கு வந்த விருந்தினர்களுக்கு சோனம் கபூர், ஆனந்த் அஹூஜா தம்பதியினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசான கைக்குட்டையில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. மேலும் அழகான பையில் செயின் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செயினில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com