தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஆயுதபூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஆயுதபூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, டாக்டர், டான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இன்று ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com