என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெஞ்செல்லாம் மோதி, மோதி.. வைரலாகும் அருண் விஜய் படத்தின் புதிய பாடல்..
    X

    அருண் விஜய்

    நெஞ்செல்லாம் மோதி, மோதி.. வைரலாகும் அருண் விஜய் படத்தின் புதிய பாடல்..

    • 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய்.
    • தற்போது அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாஃபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.


    அருண் விஜய்

    தற்போது அருண் விஜய், ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சினம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சினம்

    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கள் "நெஞ்செல்லாம்" பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கார்கி வரிகளில் ஜி.வி. பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடியுள்ள இந்த பாடல் இணையத்தை ஆகிரமித்து வருகிறது.


    Next Story
    ×