நடிகர் விஜய் கொடுத்த நம்பிக்கை.. நெகிழ்ந்த ஷாந்தனு..

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
ஷாந்தனு
ஷாந்தனு
Published on

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார்.

சினம்

இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறையினர், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சாந்தனு கூறியதாவது, "எனக்கு அருண் விஜய்யை மிகவும் பிடிக்கும். தனிநபராக அவரைப் பிடித்ததைத் தாண்டி, அவருடைய சினிமா வாழ்க்கை பயணமும் பிடிக்கும். மற்ற துறைகளில் திறமை இருந்தால் மட்டும் போதும். ஆனால், சினிமா துறையில் திறமையைத் தாண்டி வேறு சில விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்க வேண்டியுள்ளது.

சினம்

எத்தனையோ தடைகள், விமர்சனங்களைத் தாண்டி இன்று தனக்கான இடத்தை அருண் விஜய் பிடித்திருக்கிறார். என்னுடைய ஒரு படம் சரியாக போகவில்லை என்று விஜய் அண்ணாவிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போது அவரும் அருண் விஜய்யை உதாரணமாகச் சொல்லித்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். இத்தனை வருட கஷ்டங்களைத் தாண்டி இன்று நல்ல இடத்திற்கு அருண் விஜய் வந்துட்டாருல, அது மாதிரி உனக்கும் நடக்கும் என்றார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com