முன்னணி நடிகர்களுக்கு சம்மதிக்கும் நடிகைகளுக்குதான் பட வாய்ப்பு- சிம்பு பட நடிகை ஆவேசம்

சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியவர் மல்லிகா ஷெராவத்.இவரின் சமீபத்திய பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மல்லிகா ஷெராவத்
மல்லிகா ஷெராவத்
Published on

பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனம் திறந்து பேசியிருக்கிறார் இவரின் பேச்சு தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூறியதாவது, பாலிவுட்டில் பல பெரிய ஹீரோக்கள் தங்கள் விருப்பத்திற்கு உடன்படும் நடிகைகளைத்தான் தங்கள் படங்களில் நடிக்க வைக்கிறார்கள். அப்படி சம்மதிக்கும் நடிகைகளை அவர்கள் அதிகாலை 3 மணிக்கும் கூட தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள்.

அப்படி செய்ய வில்லையென்றால் அவர்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியாது. எனக்கும் கூட இது போன்ற அனுபவம் நடந்திருக்கிறது. ஆனால் நான் எதற்கும் சமரசம் செய்து கொள்ளவில்லை. நான் மர்டர் படத்தில் நடித்த போது பலரும் என்னை விமர்சனம் செய்தார்கள்.

மல்லிகா ஷெராவத்
மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

ஆனால் தற்போது கெஹ்ரயான் தொடரில் தீபிகா படுகோனே அதே போன்ற ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். இப்போது மக்களின் பார்வை வேறு விதமாக உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com