சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் மஹா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிம்பு - ஹன்சிகா
சிம்பு - ஹன்சிகா
Published on

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

மஹா படம் நீண்ட காலமாக உருவாகி வருகிறது. இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com