தமிழ் புத்தாண்டை புக் செய்த சமந்தா படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
சாகுந்தலம்
சாகுந்தலம்
Published on

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

சாகுந்தலம் போஸ்டர்

அதன்படி, 'சாகுந்தலம்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com