என் மலர்
சினிமா செய்திகள்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி
- சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யபட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரிய ஹேம்நாத் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Next Story