என் மலர்

  சினிமா செய்திகள்

  இயக்குனர் சங்கரின் கனவு படத்தில் இணையும் டாப் ஹீரோக்கள்
  X

  சங்கர்

  இயக்குனர் சங்கரின் கனவு படத்தில் இணையும் டாப் ஹீரோக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வரும் படம் ‘ராம் சரண் 15’.
  • கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் -2 திரைப்படத்தை சங்கர் இயக்கவுள்ளார்.

  நடிகர் அர்ஜூன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜெண்டில் மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். தொடர்ந்து இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகர் ராம் சரண் நடிப்பில் 'ராம் சரண் 15' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

  இந்த படத்தின் நிறைவிற்கு பிறகு இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் -2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சங்கர் கனவு படத்தின் ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


  ஹிரித்திக் ரோஷன் - ராம் சரண்

  அதாவது, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது சங்கரின் கனவு. அதன்படி, இயக்குனர் சங்கர் தனது கனவு படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் இப்படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×