சமந்தா படத்தின் புதிய புரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்'.இப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சாகுந்தலம் - சமந்தா
சாகுந்தலம் - சமந்தா
Published on

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்
சாகுந்தலம்

சாகுந்தலம்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சாகுந்தலம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் முதல் பாடலான 'மல்லிகா' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் அந்த பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com