ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட கலைஞர்.. யார் தெரியுமா?

நடிகர் ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார்.இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட கலைஞர்.. யார் தெரியுமா?
Published on

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 170' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ள இப்படத்தின் மும்பை படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 171-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ், ரஜியின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் எப்படி வில்லனாக நடிப்பார் என்ற கேள்வியும் வலம் வருகிறது. 

விஜய்யின் சில படங்களில் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com