சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் - நீதிமன்றம் உத்தரவு

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவி சந்திரன்.இவருக்கு நீதிமன்றம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்
Published on

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர், இரண்டு படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த சினிமா படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்ததாகவும், இந்த இரண்டு படங்களும் சரியாக ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன்

இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. கடன் திரும்ப வராததால், அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வக்கீல் பெஞ்சமின் ஜார்ஜ், மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர் பணத்தை செலுத்தவில்லை. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ''ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும், மனுதாரர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்'' என்று உத்தரவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com