என்னமா இப்படி பண்றீங்களே.. விமர்சனத்துக்குள்ளான பிரியா வாரியர்

பிரியா வாரியர் கண்களை சிமிட்டி வெளியிட்ட புகைப்படங்கள் இந்திய திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது.இதையடுத்து பிரியா வாரியருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது.
என்னமா இப்படி பண்றீங்களே.. விமர்சனத்துக்குள்ளான பிரியா வாரியர்
Published on

'அடர் லவ்' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படம் வெளி வருவதற்கு முன்பே பிரியா வாரியர் தனது கண்களை சிமிட்டி வெளியிட்ட புகைப்படங்கள் மலையாள சினிமா மட்டும் இன்றி இந்திய திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவி பெயரில் தயாரான இந்தி படத்தில் பிரியா வாரியர் நடித்து வந்தார்.

அந்தப் படத்தின் மீது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் படம் வெளியில் வராமல் முடங்கியது. இந்நிலையில் பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்பட ங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com